6 வயது சிறுமி ஹாசினி கொலை வழக்கு: அதிரடி தீர்ப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மென்பொறியாளர் தஷ்வந்த் வழக்கு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பில் தஷ்வந்த் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பில் அறிவிக்கப்பட்டது. ஆள்கடத்தல், கொலை, உள்பட 5 பிரிவுகளில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்துள்ளது
தஷ்வந்த் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தண்டனை விபரம் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் தனக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று தஷ்வந்த் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout