அன்றே சொன்ன ரஜினி: டுவிட்டரில் டிரண்டாகும் ஹேஷ்டேக்
Send us your feedback to audioarticles@vaarta.com
தூத்துகுடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை நிகழ்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இந்த போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால்தான் அமைதியாக சென்று கொண்டிருந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது என்று கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் ஆறுதல் கூற தூத்துகுடிக்கு சென்ற ரஜினிகாந்த் கூறினார்.
ரஜினி சொன்ன அந்த சமூக விரோதிகள் யார் என்பதை அவரே அடையாளம் காட்ட வேண்டும் என்று கூறிய பெரும்பாலான அரசியல்வாதிகள் உரிமைக்காக போராடுபவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினி கூறியதாக திரித்து கூறினர். இவ்வாறு கூறியவர்களில் ரஜினியின் நெருங்கிய நண்பர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து 20 அமைப்புகள் மீது நேற்று சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்த அமைப்புகளின் தூண்டுதலினால்தான் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது என்ற ரீதியில் சிபிஐ தனது விசாரணையை தொடக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டுவிட்டரில் #அன்றே_சொன்ன_ரஜினி என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
இந்த ஹேஷ்டேக்கில் "உண்மை ஒரு நாள் வெல்லும். இந்த உலகம் உன் பெயர் சொல்லும்... அன்று ஊரே போற்றும் மனிதன், நீயே நீயே" என்றும், "அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்று கொள்ளும் ...அது அந்த காலம், அரசன் இன்று கொள்வான்...தெய்வம் 'அன்றே' கொள்ளும் ...இது இந்த காலம்...இந்த ஜென்மத்துல பண்ண பாவம், இந்த ஜென்மத்துலே அனுபவிக்கனும்" என்றும் ரஜினிக்கு ஆதரவான கருத்துக்கள் டுவிட்டரில் பதிவாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout