செந்தில் பாலாஜியை கைவிட்டதா திமுக: பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பதில்
Send us your feedback to audioarticles@vaarta.com
போக்குவரத்து கழக பணியிடங்களில் ஆட்களை நியமிக்க முறைகேடு செய்ததாக அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்து சிறையில் அடைத்தது.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக நீடித்து வருகிறார். எட்டு மாதங்கள் ஆகியும் அவர் அமைச்சர் பதவியில் நீடிப்பது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.
தற்போது தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து கடிதத்தை ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆளுநர் மாளிகை ஒப்புதலோடு இந்த கடிதம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணனிடம் உரையாடிய போது செந்தில் பாலாஜி கைவிட்டதா திமுக என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு அவர், "செந்தில் பாலாஜியிடம் இருந்து கரூர் மாவட்ட செயலாளர் பதவியை பறித்திருந்தால் திமுக அவர்களை கைவிட்டதாக யூகித்திருக்கலாம். ஆனால் தற்போது வரை அப்படி எதுவுமே நடக்கவில்லை இந்த நிமிடம் வரை அவர்தான் திமுகவின் கரூர் மாவட்ட செயலாளர். அமலாக்கத்துறை மூலமாக பாஜக கொடுக்கும் அழுத்தம் காரணமாகவே தனது பதவியை அவர் ராஜினாமா செய்து உள்ளார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்களே கொஞ்ச நாளைக்கு ராஜினாமா செய்து விட்டு இருக்கலாமே என முன்வைத்த விஷயங்கள் இதெல்லாம் கலந்து தான் செந்தில் பாலாஜி விஷயத்திலிருந்து திமுகவை தள்ளி வைத்திருக்கிறது. இதை வைத்து திமுக பணிந்து விட்டது என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை" என தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Devan Karthik
Contact at support@indiaglitz.com