வந்துவிட்டது... 2020 இன் அடுத்த வைரஸ் பெருந்தொற்று!!! எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!!!
- IndiaGlitz, [Monday,July 06 2020]
கொரோனா, ஸ்வைன் ஃப்ளூவை தொடர்ந்து 24 மணி நேரத்தில் மனிதர்களைக் கொல்லக்கூடிய மற்றொரு நோய்த்தொற்று சீனாவில் பரவி வருவதாகத் தற்போது பரபரப்பு செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவின் வுஹான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகையே தலை கீழாகப் புரட்டி போட்டு இருக்கிறது. அதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனாவின் பெரும்பாலான மாகணங்களில் பன்றிகளிடம் புதிய வகை வைரஸ் ஒன்று பரவி வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்த விஞ்ஞானிகள் ஏற்கனவே புழகத்தில் இருக்கும் ஸ்வைன் ஃப்ளூ வைரஸ்தான் தற்போது பன்றிகளிடம் நோய்த்தொற்றை ஏற்படுத்தி வருகிறது. இது மனிதர்களுக்குப் பரவும் தன்மைக் கொண்டது. கொரோனாவை போல மனிதர்களுக்கு மற்றொரு தலைவலியாக இது இருக்கும் எனவும் எச்சரித்து இருந்தனர்.
அதையடுத்து சீனாவில் புபோனிக் பிளேக் என்ற மற்றொரு நோய்த்தொற்று பரவி வருவதாக அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டு இருக்கிறது. மங்கோலிய சுயாட்சி பகுதியில் உள்ள பயனூர் மருத்துவமனையில் இந்த பிளேக் நோய் ஏற்கனவே பரவி விட்டதாகவும் இதனால் 2 பேர் உயிரிழந்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அப்பகுதியில் மூன்றாம் நிலை நோய்த்தொற்று பரவல் எச்சரிக்கை விடுக்கப் பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு மிக விரைவிலேயே நோய்த்தொற்றை ஏற்பட்டுத்தும் இந்த வைரஸ் குறைந்தது 24 மணி நேரத்திலேயே மனிதர்களை கொல்லும் தன்மைக் கொண்டது எனவும் உலகச் சுகாதார மையம் எச்சரிக்கை செய்கிறது.
தற்போது பரவிவரும் புபோனிக் பிளேக் நோய்த்தொற்று உணவுகளைக் கொறிக்கும் தன்மைக் கொண்ட மர்மூத் என்னும் விலங்கினத்தின் மூலம் பரவி வருவதாகக் கூறப்படுகிறது. மலைகளில் வாழும் எலி, அணில் இனத்தைச் சார்ந்த மர்மூத் விலங்குகளின் இறைச்சியை உண்டதால் இந்நோய்த்தொற்று மனிதர்களை தாக்கி இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே சீனாவில் கொறிக்கும் தன்மைக்கொண்ட விலங்குகளின் இறைச்சிகளை உட்கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் வௌவால்களில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும் தன்மைக் கொண்டது எனவும் மேலும் அது எறும்பு திண்ணிகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவியதகாவும் விஞ்ஞானிகள் கூறியிருந்தனர். அதைத்தொடர்ந்து மர்மூத் இனங்களும் நோய்த்தொற்று பட்டியலில் சேர்ந்து கொண்டு இருக்கின்றன.