ஓடும் ரயிலுக்கு அடியில் படுத்து, நூலிழையில் உயிர் பிழைத்த பெண்… அதிர்ச்சி வீடியோ!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

ஹரியாணா மாநிலத்தில் தண்டவளாத்தை கடக்க முயன்ற பெண் ஒருவர் திடீரென வந்துவிட்ட ரயிலைப் பார்த்து அதிச்சி அடைந்து தண்டவாளத்திலேயே நின்று இருக்கிறார். பின்னர் அருகில் இருந்தவர்கள் படுத்துக் கொள்ளுமாறு கூறியதை அடுத்து ரயில் தண்டவாளத்திலேயே படுத்து நூலிழையில் உயிர் பிழைத்து உள்ளார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் படு வைரலாகி வருகிறது.

ஹரியாணா மாநிலத்தில் கடந்த 17 ஆம் தேதி ரயில் தண்டவாளத்தை ஒட்டி சிக்னலுக்காக காத்திருந்த பெண் ஒருவர் சிக்னல் போடப்படாமல் இருந்ததால் தண்டவாளத்தை கடந்து நடந்து சென்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அங்கு நின்று இருந்த ரயில் ஒன்று புறப்பட்டு இருக்கிறது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண் ரயில் தண்டவாளத்திலேயே நின்று விட்டார்.

இதனால் அங்கிருந்தவர்கள் பெண்ணை தண்டவாளத்திலேயே படுத்துக் கொள்ளுமாறு கத்தி உள்ளனர். இந்தக் குரல்களைக் கேட்ட அப்பெண் ஒருவழியாக நிதானம் அடைந்து தண்டவாளத்திலேயே படுத்துக் கொண்டார். பின்னர் ரயில் சென்றவுடன் அப்பெண் அங்கிருந்து மீட்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.