கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனாவா??? கதிகலங்க வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் சார்பாக 2 தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்ட சோதனையில் இருந்து வருகிறது. அதில் ஒன்றுதான் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனை இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை ஹரியாணா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ்க் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தன்னார்வலராக இருந்து செலத்திக் கொண்டார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிக்கு எனது மாநிலத்தின் முதல் தன்னார்வலராக இருக்கிறேன்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.
அப்படி கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அமைச்சர் அணில் விஜ்க்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
காரணம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. பலர் தன்னார்வலர்களாக முன்வந்து கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட பரிசோதனையில் சுமார் 1000 தன்னார்வலர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
I have been tested Corona positive. I am admitted in Civil Hospital Ambala Cantt. All those who have come in close contact to me are advised to get themselves tested for corona.
— ANIL VIJ MINISTER HARYANA (@anilvijminister) December 5, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments