கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அமைச்சருக்கு கொரோனாவா??? கதிகலங்க வைக்கும் தகவல்!!!

 

கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவில் சார்பாக 2 தடுப்பூசிகள்  கண்டுபிடிக்கப்பட்டு தற்போது இறுதிக்கட்ட சோதனையில் இருந்து வருகிறது. அதில் ஒன்றுதான் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசி. இந்தத் தடுப்பூசியின் 3 ஆம் கட்ட பரிசோதனை இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்த கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை ஹரியாணா மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் அணில் விஜ்க் கடந்த நவம்பர் 20 ஆம் தேதி தன்னார்வலராக இருந்து செலத்திக் கொண்டார். இதுகுறித்து கருத்து வெளியிட்ட அவர், “கொரோனா எதிர்ப்பு தடுப்பூசிக்கு எனது  மாநிலத்தின் முதல் தன்னார்வலராக இருக்கிறேன்” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

அப்படி கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்ட அமைச்சர் அணில் விஜ்க்கு தற்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தும் விதமாக அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். இதனால் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லது பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்து இருக்கிறார். இந்தத் தகவல் கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

காரணம் கோவேக்சின் கொரோனா தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை இந்தியா முழுவதும் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. பலர் தன்னார்வலர்களாக முன்வந்து கோவேக்சின் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்கின்றனர். இந்நிலையில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்ற தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தத் தடுப்பூசியின் 1 மற்றும் 2 ஆம் கட்ட பரிசோதனையில் சுமார் 1000 தன்னார்வலர்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உட்பிரிவு சாதிகள் பொதுப்பெயருக்கு மாற்றம்… ஆனாலும் சலுகைகள் தொடரும்… முதல்வரின் தாராள அறிவிப்பு!!!

பட்டியல் சாதிகள் பிரிவில் உள்ள பள்ளர், கடையன், வாதிரியான், தேவேந்திர குலத்தான் உள்ளிட்ட உட்பிரிவு சாதிகளை இணைத்து

பும்ராவுக்கும் நடராஜனுக்கும் இத்தனை ஒற்றுமையா??? புள்ளிவிரவரத்தை அள்ளி வீசும் முன்னாள் வீரர்!!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக அறிமுகமாகி இருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த T.நடராஜன்.

டி ராஜேந்தரின் புதிய தயாரிப்பாளர் சங்கத்தில் உஷா ராஜேந்தர்!

சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் நடந்தது என்பதும் இந்த தேர்தலில் முரளி ராமசாமி சார்பில் அணியும், டி ராஜேந்தர் சார்பில் ஒரு அணியும் போட்டியிட்டது என்பதும் தெரிந்ததே.

எத்தனை முறை சொன்னாலும் புரியவில்லை: சாட்டையை சுழற்றுவாரா கமல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று கமல்ஹாசன் தோன்றும் நாள் என்பதால் பார்வையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக கால் சென்டர் டாஸ்க்கில் ஒருசில போட்டியாளர்கள் நடந்து கொண்ட விதம்

ரஜினியுடன் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி சந்திப்பு: முக்கிய் ஆலோசனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு, டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும்