மனிதர்களுக்கு வயது அதிகரிப்பதை தடுக்கும் அசத்தலான புது கண்டுபிடிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னதாக வயது அதிகரிப்பதைத் தடுப்பதற்கு மரபணு ரீதியான சிகிச்சையை ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருந்தனர். ஆனால் தற்போது வயது அதிகரிப்பை தடுக்கும் மூலக்கூறுகள் அடங்கிய மருந்தை கண்டுபிடித்துள்ளதாகக் கூறியிருப்பது பலரிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் மனிதர்களின் வயது அதிகமாவதைத் தடுக்கும் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்து உள்ளதாகவும் 6 மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளில் அதைப் பரிசோதித்து பார்த்து தற்போது வெற்றி அடைந்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இதுகுறித்து பேசியுள்ள ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர் தனது டிவிட்டர் பக்கத்தில் மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில் நிரூபித்தோம். வேதிக் கலவை மூலமும் வயதைக் குறைக்க முடியும் என்பதைத் தற்போது நிரூபித்துள்ளோம். இதனால் குறைந்த செலவில் மனித செல்களுக்கு புத்துணர்வு ஊட்டுவதற்கான முதல் தொடக்கம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏஜிங் இதழில் இதுகுறித்து கட்டுரை வெளியிட்டுள்ள ஹார்வர்ட் விஞ்ஞானிகள் பல்வேறு சோதனைகளின்போது எலிகளின் தேல்களில் மூலக்கூறுகளைச் செலுத்தி அதன் வயது பாதியாக குறைவதைக் கண்டதாகக் கூறியுள்ளனர். மேலும் அந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்த 6 மூலக்கூறுகளில் மனநல கோளாறு மற்றும் உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்கும் தன்மைகள் உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மனித செல்களுக்கு புத்துயிர் அளித்து அவர்களின் வயதைக் குறைக்கும் இந்த முயற்சியில் தற்போது எலி மற்றும் குரங்குகளை வைத்து சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. மனித பரிசோதனைக்கு அடுத்த ஆண்டு பிற்பகுதியில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மூலக்கூறுவினால் பார்வை, நரம்பு, மூளை திசு, சிறுநீரகம் மற்றும் தசைகளில் மிகப்பெரிய மாற்றத்தைப் பார்க்க முடிந்ததாகவும் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் ஆயுட்காலம் அதிகரிப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் குரங்குகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில் அவற்றின் பார்வை திறனில் மேம்பாடு ஏற்பட்டதை உணர்ந்ததாகவும் கூறியுள்ளனர்.
மனிதர்களின் வயதைக் குறைப்பதற்கு மூலக்கூறுகளை அடங்கிய மருந்தை ஹார்வர்ட் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள நிலையில் இது ஆராய்ச்சியின் ஆரம்பநிலையாக இருக்கிறதே தவிர முற்றிலும் நிரூபிக்கப்பட்ட உண்மையாக இல்லை என்று மற்ற மருத்துவர்கள் கருத்து தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Grateful to share our latest publication: We’ve previously shown age reversal is possible using gene therapy to turn on embryonic genes. Now we show it’s possible with chemical cocktails, a step towards affordable whole-body rejuvenation 1/17 https://t.co/J9c01lv5FQ
— David Sinclair (@davidasinclair) July 12, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments