ஹாரி பாட்டர் பட நடிகை ஹெலன் மெர்க்குரி புற்றுநோயால் காலமானார்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகப் புகழ்பெற்ற பட வரிசையில் நிச்சயம் ஹாரிபாட்டர் தொடர் வரிசை படங்களும் இடம் பிடித்து இருக்கிறது. அந்தப் படங்களில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நடிகை ஹெலன் மெர்க்குரி. 52 வயதான இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று காலமானார். இந்தத் தகவலை அவருடைய கணவரும் நடிகருமான டமியன் லிவிஸ் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஹாரி பாட்டர் திரைப்படத்தில் நர்சிசா மல்ஃப்ய் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஹெலன் மெர்க்குரி தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். மேலும் இவர் தேர்வு செய்யும் அனைத்துத் திரைப்படங்களும் நடிப்புக்கு வாய்ப்பு உள்ள கதாபாத்திரங்களாக அமைந்து சிறந்த நடிகை என்ற பெயரையும் பெற்று இருந்தார்.
மேலும் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான ஸ்கைஃபால் திரைப்படத்திலும் முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மனைவி வேடித்திலும் நடித்தன் மூலம் இவர் உலக முழுவதும் பிரபலமானார். அதோடு ஃப்கி பிலிண்டர்ஸ் தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருந்தார். இந்நிலையில் 52 வயதான இவர் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார். இவரது இறப்பிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் வருத்தத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஹாரிபாட்டர் எழுத்தாளரான ஜே.கே. ரவுலிங், ஹெலன் மெர்க்குரி இறப்புக்கு தனது உருக்கமான வருத்தத்தை வெளியிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
— Damian Lewis (@lewis_damian) April 16, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments