Harris Jeyaraj's 'Irandam Ulagam' audio launch in August (தமிழ்)
Send us your feedback to audioarticles@vaarta.com
பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் மிக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் 'இரண்டாம் உலகம்' படத்தின் இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
முதற்கட்டமாக படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி நடைபெற உள்ளது. ஹரீஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் பாடல்களை சோனி ஆடியோ நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது.
ஆர்யா&அனுஷ்கா ஜோடி நடிப்பில் இந்த படத்தின் பெரும் பகுதி காட்சிகள் ஜார்ஜியா காடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற 'அவ்தார்' படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து 'இரண்டாம் உலகம்' படத்தின் கிராபிக்ஸ் பணிகளை இயக்குனர் செல்வராகவன் கவனித்து வந்தார்.
பணிகள் முடிந்து படம் ரிலீசுக்கு ரெடியானதால் முதற்கட்டமாக ஆடியோவை வெளியிடுகிறார். அதன்பிறகு படம் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார். படத்தின் பட்ஜெட்டும் 60 கோடியை தாண்டி மெகா பட்ஜெட் படமாக தயாராகியுள்ளதாம்.
Follow us on Google News and stay updated with the latest!
-
Contact at support@indiaglitz.com
Comments