இப்ப சந்தோஷம் தானா? எஸ்பிபியின் கேள்வியை கேட்டு ஆச்சரியமடைந்தேன்: ஹாரீஸ் ஜெயராஜ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபியின் மறைவு திரையுலகினர்களை உலுக்கியுள்ள நிலையில் அவருடன் பழகிய நினைவலைகளை அவ்வப்போது திரையுலக நட்சத்திரங்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் எஸ்பிபியின் ஆச்சரியமான மனிதநேயம் குறித்த ஒரு சம்பவத்தை கூறியுள்ளார்
கார்த்தி நடித்த ’தேவ்’ என்ற படத்திற்காக ’என்னை விட்டு’ என்ற பாடலை ஒலிப்பதிவு செய்தவுடன் தன்னுடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று எஸ்பிபி கோரிக்கை விடுத்தார். உடனே நான் அவருக்கு சம்மதம் தெரிவித்த நிலையில் தனது டிரைவரையும் அழைத்து எனது அருகில் நிற்க வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்
இந்த புகைப்படத்தை தனது மொபைலில் இருந்து டிரைவருக்கு பகிர்ந்துகொண்ட எஸ்பி பாலசுப்ரமணியம் ’இப்ப சந்தோஷம் தானா?’ என்று அவரிடம் கேட்டுள்ளார். அவருடைய இந்த கேள்வி எனக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்தது. தனது டிரைவரின் ஆசையை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக என்னுடன் புகைப்படம் எடுத்த எஸ்பிபியின் மனிதநேயம் என்னை வியக்க வைத்தது’ என்று ஹாரீஸ் ஜெயராஜ் அந்த பதிவில் கூறியுள்ளார்
எஸ்பிபி அவர்கள் உயிரோடு இருந்த போது வெளிவராத பல தகவல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதை அறிந்து அவருடைய ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்
After recording ”Enna Vittu” from Dev, Balu Sir requested for a picture of me with his driver and clicked it by himself in his mobile and shared that with the young man and asked “Ippo Sandhoshama ?” What a humble, down to earth human being I have ever witnessed in my life. ?? pic.twitter.com/UZqOP2gmRS
— Harris Jayaraj (@Jharrisjayaraj) September 27, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com