சூர்யாவின் 'காப்பான்' படத்தில் பாடகியாகிய பிரபல இசையமைப்பாளரின் மகள்

  • IndiaGlitz, [Sunday,July 21 2019]

சூர்யா நடிப்பில், இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில், லைக்கா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'காப்பான்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் உட்பட பலர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் மகள் நிகிதா 'காப்பான்' படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளதாகவும், அந்த பாடலை இன்றைய விழாவில் நிகிதா நேரடியாக பாடவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. பல இசையமைப்பாளர்களின் வாரிசுகள் பாடகியாக அறிமுகமாகி கொண்டிருக்கும் நிலையில் சூர்யா படம் மூலம் ஹாரிஸ் ஜெயராஜின் மகளும் பாடகியாக அறிமுகமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா, மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி, பூர்ணா, பிரேம், தலைவாசல் விஜய், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்எஸ் பிரபு மற்றும் அபிநந்தன் ராமானுஜன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இந்த படத்திற்கு பட்டுக்கோட்டை பிரபாகர் மற்றும் கபிலன் வைரமுத்து ஆகியோர் வசனம் எழுதியுள்ளனர்.