'S3' படத்தில் சூர்யாவின் அறிமுகப்பாடல் இதுதான்!!

  • IndiaGlitz, [Sunday,September 18 2016]

சூர்யா நடித்து வரும் 'சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமான 'S3' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அனேகமாக இம்மாத இறுதியில் அல்லது அடுத்த மாத முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு இசையமைத்து வரும் ஹாரீஸ் ஜெயராஜ், சூர்யாவின் அறிமுகப்பாடலை தற்போது கம்போஸ் செய்து முடித்துள்ளார். 'ஓ சோனி சோனி, சூப்பர் சோனிக்' என்று தொடங்கும் இந்த பாடல் சூர்யாவின் ரசிகர்களுக்கு இசை விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை ஹாரீஸ் ஜெயராஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சூர்யா, அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஹரி இயக்கியுள்ள இந்த படத்திற்கு பிரியன் ஒளிப்பதிவாளராகவும் வி.டி.விஜயன் படத்தொகுப்பாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.