திரையில் ஜோடியாக மாறும் பிக்பாஸ் பங்கேற்பாளர்கள்

  • IndiaGlitz, [Tuesday,October 31 2017]

சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியால் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருமே மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். ஓவியா, ஆரவ், ஹரிஷ் கல்யாண், ரைசா, வையாபுரி போன்றவர்கள் பாசிட்டிவ் பிரபலமாகவும், ஜூலி, காயத்ரி போன்றவர்கள் நெகட்டிவ் பிரபலமாகவும் மாறினர்

இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலருக்கு திரையுலகிலும், தொலைக்காட்சியிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகின்றது. ஓவியாவுக்கு ஒரு பக்கம் திரைப்படங்கள் குவிந்து வருவதையும் இன்னொரு ஜூலி, காயத்ரி, சக்தி போன்றவகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பணியும் கிடைத்து வரும் செய்திகளை பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களான ஹரிஷ் கல்யாண், ரைசா ஆகியோர் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். கிருஷ்ணா, சந்திரன் நடித்த கிரகணம்' என்ற திகில் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நவம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

More News

'மெர்சல்' பட நடிகருக்கு திருமண வாழ்த்துக்கள்

விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தில் விஜய்யை அடுத்து பல நடிகர், நடிகைகள் தங்கள் நடிப்பு திறமையை நிரூபித்திருந்தனர். அந்த வகையில் மனதை விட்டு நீங்காத கேரக்டரில் நடித்தவர் காளிவெங்கட்

முதல்முறையாக அஜித், விஜய், சூர்யா படங்கள் மோதுகிறதா?

கோலிவுட் திரையுலகின் மூன்று முன்னணி நடிகர்களான அஜித், விஜய், மற்றும் சூர்யா ஆகியோர்களின் அடுத்த படங்கள் வரும் ஜனவரியில் தொடங்கவுள்ள நிலையில் இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகும்

'காலா' ரிலீஸ் எப்போது? தனுஷ் நிறுவனம் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த '2.0' திரைப்படம் ஜனவரியில் இருந்து ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கடந்த சில தினங்களாக செய்திகள் வெளிவந்த நிலையில்

நம்பர் ஒன் இடத்தை பிடித்த விராத்கோஹ்லி-மிதாலிராஜ்: இந்தியாவின் பெருமை

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் அடித்த சதம், இந்தியாவின் வெற்றிக்கு மட்டும் உதவவில்லை,

'2.0' ரிலீஸ் தள்ளிப் போகின்றதா? படக்குழுவினர் விளக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்சயகுமார், எமிஜாக்சன் நடித்த '2.0' திரைப்படம் வரும் ஜனவரி 25ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் இரவுபகலாக நடந்து கொண்டிருக்கின்றது