close
Choose your channels

லூஸ்லியா இதயங்களை வென்றுவிட்டார்: பிரபல நடிகரின் டுவீட்

Thursday, June 27, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று போட்டியாளர்களின் அறிமுகங்களுடன் தொடங்கிய நிலையில் முதல் நாளே இலங்கை தமிழ்ப்பெண்ணான லூஸ்லியாவுக்கு சமூக வலைத்தள போராளிகள் ஆர்மி அமைத்து கொண்டாட தொடங்கிவிட்டனர்.

அபிராமி, சாக்சி, ரேஷ்மா, வனிதா, மீரா மிதுன் உள்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் தங்களை முன்னிலைப்படுத்த கோபம், அழுகை ,காதல் உள்பட பல விஷயங்களை செய்து கொண்டிருந்தாலும் எதையும் மிகைப்படுத்தாமல் அமைதியாக எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து அதே நேரத்தில் அழகாகவும் கள்ளங்கபடம் இன்றியும் பிக்பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கின்றார் லூஸ்லியா

இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் லூஸ்லியா, 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை கேமிரா முன் பாடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது. ஒருசிலர் இந்த வீடியோவை ஹரிஷ் கல்யாண், லூஸ்லியாவுடன் இணைத்து வீடியோவை பதிவு செய்துள்ளனர். இந்த பாடலில் வரும் வரிகள் இவைதான்

கண்ணம்மா உன்னை மனசு நினைக்கிற பார்ரை பாரடி பெண்ணே
என்னென்னமோ கொஞ்சி பேச துடிக்கிற நீயும் பேசடி கண்ணே

இந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் சுட்டிக்காட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண், 'லூஸ்லியா பலருடைய இதயங்களை வென்றுவிட்டார். 'கண்ணம்மா' பாடலை அவர் பாடியதை கேட்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வீடியோவை எடிட் செய்தவருக்கும் நன்றி' என்று தெரிவித்திருந்தார். பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் போட்டியாளர் ஒருவரின் மனதையே லூஸ்லியா வென்றுவிட்டது அவர் சாம்பியன் பட்டத்தை நோக்கி செல்கிறார் என்பதை காட்டுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment