காதலியுடன் திருமணம்.. ஹரிஷ் கல்யாண் வெளியிட்ட அறிக்கை!

  • IndiaGlitz, [Thursday,October 06 2022]

நடிகர் ஹரீஷ் கல்யாண் தான் நீண்ட நாட்களாக காதலித்த பெண்ணை திருமணம் செய்ய இருப்பதாக நேற்று தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்த நிலையில் இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் என் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிர்ஷம் எனக்கு கிடைத்தது. என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதேபோல் இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறார்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளுக்கு உதவியவர்கள். ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களிடம் பகிர்ந்து கொள்வது எனது பயணத்தில் மிகவும் வெற்றிகரமான பகுதியாகும்.

இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள், குடும்பத்தின், திரையுலக நண்பர்கள், ஊடக நண்பர்கள், எனது அன்பான ரசிகர்கள் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரின் ஆசியுடன் நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கை பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும், எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் ஆசீர்வாதங்களையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு ஹரிஷ் கல்யாண் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.