ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடி போகும்.. பிக்பாஸ் நடிகரின் நெகிழ்ச்சி பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடி போகும் என்று பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண் என்பதும் இவர் நடித்த ’பார்க்கிங்’ என்ற திரைப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் சமீபத்தில் கூட இந்த படம் நான்கு இந்திய மொழிகளிலும் ஒரு வெளிநாட்டு மொழிகளிலும் ரீமேக் செய்ய ஒப்பந்தம் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக தயாரிப்பாளர் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’பார்க்கிங்’ படத்தின் ஸ்கிரிப்ட் தற்போது ஆஸ்கார் லைப்ரரியில் இணைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள ஹரிஷ் கல்யாண், ’பார்க்கிங்’ படத்தின் ஆச்சரியமிக்க பயணத்திற்கு வாய்ப்பு கொடுத்த படக்குழுவினர்களுக்கு எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு நல்ல கதை அதுக்கான இடத்தை தானே தேடி போகும் என்றும் அவர் கூறியதை அடுத்து இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது ’நூறு கோடி வானவில்’ ’டீசல்’ மற்றும் ’லப்பர் பந்து’ ஆகிய மூன்று படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மூன்று படங்களும் அடுத்தடுத்து இந்த ஆண்டுக்குள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
From your hearts to the #Oscars library.
— Harish Kalyan (@iamharishkalyan) May 23, 2024
Oru Nalla Kadhai adhukaana edatha thaney thedi pogum. 🙏 #Parking #Academy
Grateful for this incredible Journey. Thank you! Love to my team ❤️🙏 @ImRamkumar_B @Actress_Indhuja @sinish_s @jsp2086 @philoedit @SoldiersFactory… pic.twitter.com/p6AOwsjlZU
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments