ஷ்ஷ்...யப்பா முடியலடா.. விஷ்ணு வீடியோவுக்கு ஹரிஷ் கல்யாணின் பதிவு..!

  • IndiaGlitz, [Thursday,November 30 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு, மணியுடன் பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு ஷ்ஷ்...யப்பா முடியலடா.. என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் வைத்த டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் வென்ற நிலையில் அவர்களுக்கு தன்னிடம் உள்ள கோல்ட் ஸ்டாரை கொடுத்தார். இந்த நிலையில் விஷ்ணு மணியிடம் இதுகுறித்து கூறிய போது ஹரிஷ் கல்யாண் தனது நெருங்கிய நண்பர் என்றும் அதனால்தான் அந்த கோல்ட் ஸ்டாரை என்னிடம் கொடுத்தார் என்றும் அவர் கூறினார். இதை மணி நம்பாதது போல் கேட்டுக் கொண்டிருந்தார்.

இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஷ்ஷ்...யப்பா முடியலடா.. என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்துள்ளார். விஷ்ணு ஆரம்பத்தில் புத்திசாலித்தனமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் கோமாளித்தனமாக விளையாடி வருகிறார். தன்னை டைட்டில் வின்னர் என்றும் வில்லன் என்றும் அவரே தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் என்னுடைய நண்பர் என்று விஷ்ணு கூறிய நிலையில் ‘இது ஹரிஷ் கல்யாணுக்கு தெரியுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த பதிவுக்கு தான் ஹரிஷ் கல்யாண் தனது காமெடி பதிவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

More News

கயிற்றால் கட்டப்பட்ட விஷ்ணு, அர்ச்சனா, பூர்ணிமா.. கொளுத்திவிட்ட ரவீனா.. என்ன நடந்தது?

பிக் பாஸ் நிகழ்ச்சியை 60 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. அதில் விஷ்ணு,

'இந்த மனசு தான் சார் தங்கம்'..ஜெயம் ரவியின் தாராள மனதை பார்த்து ஆச்சரியமடைந்த கோலிவுட்..!

தமிழ் திரை உலகில் இதுவரை ஒரு திரைப்படத்தின் டைட்டிலில் முதலில் நாயகன் பெயர் மட்டுமே இருக்கும் என்பதும் நாயகி பெயர் அடுத்தடுத்து தான் வரும் என்பதும் தெரிந்ததே.

IMDB ரேட்டிங்கில் நயன்தாரா, தமன்னா, விஜய்சேதுபதியை முந்திய 'ஜெயம் ரவி' நாயகி..!

 IMDB ரேட்டிங்கில் நயன்தாரா, தமன்னா, விஜய் சேதுபதியை, ஜெயம் ரவி படத்தில் நடித்து வரும் நடிகை முந்தி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூர்ணிமாவின் நட்பு குறித்து அதிரடி முடிவெடுத்த விஷ்ணு.. திடீர் திருப்பத்திற்கு என்ன காரணம்?

கடந்த சில நாட்களாக பூர்ணிமா மற்றும் விஷ்ணு நெருக்கமாக பேசிக் கொண்டிருந்தனர் என்பதும் இருவரும் காதலிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மாயா, விசித்ரா உட்பட ஒரு சிலர் இது குறித்து பேசியபோது

'நல்லா பண்ணுங்க.. சூப்பரா பண்ணுங்க'.. சிம்பு பட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய ரஜினிகாந்த்..!

'நல்லா பண்ணுங்க.. சூப்பரா பண்ணுங்க'.. என சிம்பு படத்தை இயக்க இருக்கும் இயக்குனருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.