ஷ்ஷ்...யப்பா முடியலடா.. விஷ்ணு வீடியோவுக்கு ஹரிஷ் கல்யாணின் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஷ்ணு, மணியுடன் பேசுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அந்த வீடியோவுக்கு ஷ்ஷ்...யப்பா முடியலடா.. என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ திரைப்படம் வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்தார்.
அப்போது அவர் வைத்த டாஸ்க்கில் ஸ்மால் பாஸ் போட்டியாளர்கள் வென்ற நிலையில் அவர்களுக்கு தன்னிடம் உள்ள கோல்ட் ஸ்டாரை கொடுத்தார். இந்த நிலையில் விஷ்ணு மணியிடம் இதுகுறித்து கூறிய போது ஹரிஷ் கல்யாண் தனது நெருங்கிய நண்பர் என்றும் அதனால்தான் அந்த கோல்ட் ஸ்டாரை என்னிடம் கொடுத்தார் என்றும் அவர் கூறினார். இதை மணி நம்பாதது போல் கேட்டுக் கொண்டிருந்தார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ஷ்ஷ்...யப்பா முடியலடா.. என்று ஹரிஷ் கல்யாண் பதிவு செய்துள்ளார். விஷ்ணு ஆரம்பத்தில் புத்திசாலித்தனமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அவர் கோமாளித்தனமாக விளையாடி வருகிறார். தன்னை டைட்டில் வின்னர் என்றும் வில்லன் என்றும் அவரே தற்பெருமை பேசிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் என்னுடைய நண்பர் என்று விஷ்ணு கூறிய நிலையில் ‘இது ஹரிஷ் கல்யாணுக்கு தெரியுமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய நிலையில் இந்த பதிவுக்கு தான் ஹரிஷ் கல்யாண் தனது காமெடி பதிவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
https://t.co/LQqQv6W9qm pic.twitter.com/mDhRPas01N
— Harish Kalyan (@iamharishkalyan) November 30, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com