யுவன்ஷங்கர் ராஜாவின் சூப்பர் 'ஸ்டார்' புதிருக்கான விடை: டைட்டில் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இயக்குனர் எலான் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைக்க உள்ளார் என்பதையும் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று ரஜினி பிறந்த நாளில் வெளியாகவிருப்பதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாளையொட்டி இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாவதால், இந்த படத்தின் டைட்டில் ரஜினி படத்தின் டைட்டிலாகவோ அல்லது அவரது பஞ்ச் வசனமே டைட்டில் ஆகவோ இருக்கலாம் என்பதும் இதுகுறித்து யுவன்சங்கர்ராஜா தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புதிரையும் போட்டார் என்பதையும் நேற்று பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் யுவனின் புதிருக்கான விடையாக இந்த படத்தின் டைட்டில் ‘ஸ்டார்’ என்று வைக்கப்பட்டுள்ளது. ஸ்க்ரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்திற்கு எழிலரசு ஒளிப்பதிவும், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு பணியும் செய்யவுள்ளனர். ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே நடித்து வெற்றி பெற்ற ‘பியார் பிரேமா காதல்’ டீம் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து மீண்டுமொரு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.