ஹரிஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஹரிஷ் கல்யாண் நடித்த 'பியார் பிரேமா காதல்' மற்றும் 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் ஒரு காமெடி ரொமான்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தின் டைட்டிலை ஹரிஷ்கல்யாண் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். இந்த படத்தின் டைட்டில் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை நடிகரும் இயக்குனருமான சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்கவுள்ளார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தை கோகுலம் மூவீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், ஜோசியத்தில் நம்பிக்கையுள்ள ஒரு இளைஞராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும், ஜாலியான காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கும் உங்கள் அன்பும், ஆதரவும் தேவை என்றும், ஹரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
With all your love and support, Im very happy & excited to announce the title of my next film. Here it is #DhanusuRaasiNeyargale#DRNTHEFILM @isanjaybharathi @GhibranOfficial @Gokulam_Movies Will definitely give our best. Love you all ❤️?? pic.twitter.com/uER0ywG0Va
— Harish kalyan (@iamharishkalyan) April 7, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments