'சலார்' தள்ளி போனதால் ரிலீஸ் ஆகும் ஹரிஷ் கல்யாண் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,September 02 2023]

பிரபாஸ் நடித்த ’சலார்’ திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் பணிகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 2 வரை நீண்ட விடுமுறை இருப்பதால் இந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொள்ள சில படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த ’இறைவன்’ திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி தான் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்த ’பார்க்கிங்’ என்ற திரைப்படம் இதே தேதியில் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாண் மற்றும் பிகில் நடிகை இந்துஜா நடித்த ’பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் என்பவர் இயக்கி உள்ளார்.

சாம் சிஎஸ் இசையில் உருவான இந்த படம் ஒரு அப்பார்ட்மெண்டில் கார் பார்க்கிங் சம்பந்தமான பிரச்சனை வரும் நிலையில் அந்த பிரச்சனையால் ஏற்படும் விளைவு என்ன என்பதே ஆகும்.

ஐடி நிறுவனத்தில் ஊழியராக ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள இந்த படத்தில் எம்எஸ் பாஸ்கர், இளவரசு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

More News

அமெரிக்காவில் FDFS படம் பார்த்த விஜய்.. ஃபேன் பேயாக மாறி செய்த அலப்பறை..!

தளபதி விஜய்யின் திரைப்படங்கள் வெளியாகும் போது அவரது ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து திரையில் விஜய் தோன்றும் போது அலப்பறை செய்வார்கள். அதேபோல் தற்போது அமெரிக்காவில் உள்ள

நடிகர் மாதவனுக்கு மத்திய அரசு கொடுத்த சிறப்பு பதவி.. குவியும் வாழ்த்துக்கள்..!

நடிகர் மாதவன் நடித்து, இயக்கி, தயாரித்த 'ராக்கெட்டரி' என்ற திரைப்படத்திற்கு சமீபத்தில் தேசிய விருது கிடைத்த நிலையில் தற்போது மத்திய அரசு அவருக்கு சிறப்பு பதவியை கொடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஜினியை அடுத்து நெல்சனுக்கு டபுள் சர்ப்ரைஸ் கொடுத்த கலாநிதி மாறன்.. வேற லெவல் வீடியோ வைரல்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான  'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சூப்பர் சிங்கர் ஜூனியரில், மிமிக்ரியில் கலக்கிய இளம் பாடகி ஹர்ஷினி நேத்ரா!!

கோலாகலமாக நடந்து வரும் ஜூனியர் சூப்பர் சிங்கர் 9 வது சீசன் நிகழ்ச்சியில், இளம் சிறுமி ஹர்ஷினி நேத்ரா மிமிக்ரி குரலில் பாடி ஆச்சர்யப்படுத்தினார்,  அவர் பாடலை கேட்டு அசந்து போன நடுவர்கள், அவரை வெகுவாக

5 நாட்கள் தொடர் விடுமுறை.. பின்வாங்கிய பிரபாஸ் படம்.. ஜெயம் ரவி படத்திற்கு அடித்தது ஜாக்பாட்..!

ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை மற்றும் பிரபாஸ் நடித்த 'சலார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு ஆகிய காரணங்களால் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படத்திற்கு ஜாக்பாட் அடித்து உள்ளதாக