ஹரிஷ் கல்யாணுக்கு 34 வயது.. அவரது மாமியாருக்கு 33 வயது.. எப்படி ஒப்புக்கொண்டார்?

  • IndiaGlitz, [Wednesday,November 13 2024]

சமீபத்தில் வெளியான ’லப்பர் பந்து’ என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய, தற்போது ஓடிடியிலும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடித்தவருக்கு ஹரிஷ் கல்யாணை விட ஒரு வயது குறைவு என்ற தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

’லப்பர் பந்து’ திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடிக்க, பிரபல நடிகைகளிடம் இயக்குனர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், ஆனால் மாமியார் கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்பதை எடுத்து, எனக்கு அந்த கேரக்டர் வந்தது என்றும் ’லப்பர் பந்து திரைப்படத்தில் கெத்து தினேஷ் ஜோடியாக நடித்த அசோதா என்ற கேரக்டரில் நடித்த நடிகை ஸ்வாசிகா சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறேன், உண்மையிலேயே அந்த கேரக்டர் எனக்கு எதிர்பாராத பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என்றும், இந்த கேரக்டர் கிடைத்தது எனக்கு ஒரு வரம்’ என்றும் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் மாமியாராக நடிக்க வேண்டுமா என்று மற்ற நடிகைகள் போலவே நானும் சிறிது யோசித்தேன், ஆனால் அந்த அசோதா கேரக்டர் என்னை என்னவோ செய்ததால் நான் ஒப்புக்கொண்டேன், தற்போது குவிந்து வரும் பாராட்டை பார்க்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் குறிப்பாக பா ரஞ்சித், மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் வயது 34 என்ற நிலையில், அவரது மாமியாராக நடித்த ஸ்வாசிகாவுக்கு வயது 33 தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

'அங்க மூணாவதா ஒருத்தர் இருப்பாரே... 'தளபதி 69' படத்தில் 'ஜெயிலர்' மாஸ் நடிகர்..!

'ஜெயிலர்' திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வில்லனிடம் 'அங்கே மூணாவதா ஒருத்தர் இருப்பாரே' என்று கூறியவுடன் மாஸ் நடிகர் திரையில் தோன்றுவார் என்பதும் அப்போது திரையரங்கமே அதிரும்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'பாராசூட்' டீசர் ரிலீஸ்..!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அதன் அடுத்த  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான  'பாராசூட்' டீசரை வெளியிட்டுள்ளது.

திருமண பொருத்தம் எப்படி இருக்க வேண்டும்? செவ்வாய் தோஷம், மூல நட்சத்திரம்

ஆன்மீகக்ளிட்ஸ் சேனலில், பிரபல ஜோதிடர் வித்யா கார்த்திக் அவர்கள் திருமண பொருத்தம் குறித்து மிகவும் சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சத்யராஜ் வீட்டில் 4 ஆண்டுகளாக கோமாவில் இருக்கும் நபர்.. மகள் திவ்யாவின் அதிர்ச்சி தகவல்..!

நடிகர் சத்யராஜ் வீட்டில் உள்ள ஒருவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கோமாவில் இருப்பதாக சத்யராஜின் மகள் திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில்,

எப்போது வேண்டுமானாலும் தாயாகலாம்: சமந்தாவின் பேட்டி..!

ஒரு பெண் எப்போது வேண்டுமானாலும் தாயாகலாம் என்றும், ஒரு பெண் தாயாவது அழகான அனுபவம் என்றும் சமீபத்தில் நடிகை சமந்தா பேட்டி அளித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.