மீண்டும் இணையும் 'பார்க்கிங்' கூட்டணி.. ஹரிஷ் கல்யாண் அடுத்த பட அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் அதே தயாரிப்பு நிறுவனத்துடன் மீண்டும் ஹரிஷ் கல்யாண் ஒரு படத்தில் இணைய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ‘பார்க்கிங்’ என்ற திரைப்படம் நடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படம் திரையரங்குகளில் மட்டும் ரூ.17 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக தகவல் வெளியானது.
இந்நிலையில் ‘பார்க்கிங்’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் தற்போது அதே நிறுவனம் ஹரிஷ் கல்யாணின் அடுத்த படத்தை தயாரிக்க இருப்பதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது. இந்த படத்தை ’அந்தாகாரம்’ என்ற படத்தை இயக்கிய விக் நாகராஜன் என்பவர் இயக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று ஹரிஷ் கல்யாண் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருடைய பிறந்தநாள் பரிசாக இந்த பட அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று குறிப்பிடத்தக்கது.
அர்ஜுன் தாஸ் நடித்த ’அந்தாகாரம்’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மீண்டும் அதே போல் ஒரு த்ரில் திரைப்படத்தை விக் நாகராஜன் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sending birthday wishes to the super talented @iamharishkalyan ❤️
— Passion Studios (@PassionStudios_) June 29, 2024
After the huge success of #Parking, we’re thrilled to be working with you on an upcoming project, directed by #Andhaghaaram fame @vvignarajan💥
Wishing you a year as amazing as your talent & as dynamic as your… pic.twitter.com/6zgDxc9XXD
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments