இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் பிக்பாஸ் ஹீரோ!

  • IndiaGlitz, [Wednesday,September 09 2020]

இயக்குனர் சசி இயக்கவுள்ள அடுத்த படத்தில் பிக்பாஸ் போட்டியாளர் நடிக்கவிருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

‘சொல்லாமலே’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் சசி அதன் பின்னர் ’ரோஜா கூட்டம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கினார். கடந்த 2016ஆம் ஆண்டு அவர் இயக்கிய ’பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப் பெரிய ஹிட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்தப் படம் வசூலை அள்ளிக் கொடுத்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கடந்த ஆண்டு ’சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சசி அப்போதே அவருடைய அடுத்த படத்தில் நடிகர் மற்றும் பிக்பாஸ் புகழ் ஹரீஷ் கல்யாண் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இது குறித்த செய்தியையும் ஏற்கனவே நாம் பார்த்தோம். இந்த நிலையில் தற்போது இயக்குநர் சசி இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹரிஷ் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்று இயக்குனர் சசி தனது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகர் ஹரீஷ் கல்யாண் ’உங்களது அடுத்த படத்தில் நடிக்க இருப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். படப்பிடிப்புக்கான நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன், பிறந்த நாள் வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். இதிலிருந்து இயக்குனர் சசியின் அடுத்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.