என்னை செஞ்சவங்கள திருப்பி ஏதாவது செய்யணும்ல்ல.. ஹரிஷ் கல்யாணின் 'பார்க்கிங்; டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,November 17 2023]

ஒரு காரை வீட்டின் முன் பார்க்கிங் செய்வதினால் ஏற்படும் சின்ன பிரச்சனை எப்படி பெரிய பிரச்சனை ஆகி வாழ்க்கையையே திருப்பிப் போட்டு விடுகிறது என்பதை கொண்ட கதையம்சம் கொண்டது தான் ‘பார்க்கிங்’ திரைப்படம்.

ஹரிஷ் கல்யாண் மற்றும் இந்துஜா தம்பதியினர் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்து வரும் நிலையில் புதிதாக கார் வாங்குகின்றனர். அந்த காரை பார்க்கிங் செய்வதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் எம்எஸ் பாஸ்கர் இடையே பிரச்சனை எழுகிறது. அந்த பிரச்சனை எப்படி விபரீதமாகி ஹரிஷ் கல்யாண் வாழ்க்கையே புரட்டி போடுகிறது என்ற கதையை இயக்குனர் ராம் குமார் பாலகிருஷ்ணா மிக அருமையாக இயக்கி உள்ளார். இரண்டாம் பாதியில் ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பாக செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹரிஷ் கல்யாண், இந்துஜா, எம் எஸ் பாஸ்கர், ரமா, உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ஹரிஷ் கல்யாணம் ஆகிய இருவரும் உண்மையில் தத்ரூபமாக நடித்துள்ளனர். இந்த படம் திரையரங்குகளில் டிசம்பர் ஒன்றாம் தேதி வெளியாக உள்ளதாக டிரைலரில் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு இந்த படம் ஒரு சிறந்த வெற்றி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இந்தியா உலகக் கோப்பையை வென்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்: பிரபல நடிகை..!

 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டி நடைபெற உள்ளது

குசும்பு ஜாஸ்தி: போட்டியாளர் மிக்சர் சாப்பிடும் போது ஓட்டு போட சொன்ன விஜய் டிவி..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், பிக்பாஸ் அவ்வப்போது போட்டியாளர் சரவணன் விக்ரமை கலாய்த்து என்பதை பார்த்து வருகிறார். சரவணன் விக்ரம் 'நான் தான் இந்த சீசனின் டைட்டில்

40 நாள் ஐஷு ஒன்னுமே செய்யாததற்கு நீ தான் காரணம்.. ஆவேசமான அர்ச்சனா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மேலும் விறுவிறுப்பாக்க தினந்தோறும் ப்ரோமோ வீடியோக்கள்

தனது பிறந்த நாளில் பிறந்த மகள்: டிவி சீரியல் நடிகையின் மகிழ்ச்சியான பதிவு..!

 டிவி சீரியல் நடிகை தனக்கு மகள் பிறந்திருப்பதாகவும் தனது பிறந்தநாள் அன்றே தனது மகளும் பிறந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்  

என்னை ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி: கீர்த்தி சுரேஷின் வீடியோ வைரல்..!

நடிகை கீர்த்தி சுரேஷ் திரையுலகில் அறிமுகமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து அவர் அனைவருக்கும் நன்றி கூறிய நிலையில் தன்னை கேலி கிண்டல் செய்தவர்களுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.