'காதலர் தினத்தில் காதலை பகிர்ந்து கொள்கிறேன்': ப்ரியா பவானிசங்கரின் ரொமான்ஸ் புகைப்படம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலக காதலர்களும் தங்களது ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பட்டியலை நோக்கி சென்று கொண்டிருக்கும் நடிகை பிரியா பவானிசங்கர் தான் நடித்துக்கொண்டிருக்கும் படம் ஒன்றின் ரொமான்ஸ் புகைப்படத்தை பதிவு செய்து இந்த தினத்தில் காதலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ’ஓ மணப்பெண்ணே’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸாக உள்ள நிலையில் இந்த படத்தின் காதலர் தின ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
கார்த்திக் சுந்தர் என்பவர் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இந்த படம் மிக விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments