ஹரிஷ் கல்யாண் - 'அட்டக்கத்தி' தினேஷ் படம்.. டைட்டில் அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஹரிஷ் கல்யாண் மற்றும் ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகிய இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் சற்று முன் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று பிரின்ஸ் பிக்சர்ஸ் என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் மற்றும் ‘அட்டக்கத்தி’ தினேஷ் ஆகியோர் நடித்து வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ’லப்பர் பந்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது, தமிழரசன் பச்சை முத்து என்பவர் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து வருகிறார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவில் மதன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படம் குறித்த முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
• @Prince_Pictures next titled #LubberPandhu 🏏
— Prince Pictures (@Prince_Pictures) March 3, 2023
Here is the title look poster!@iamharishkalyan #AttakathiDinesh @tamizh018 @lakku76 @venkatavmedia @isanjkayy @bala_actor @rseanroldan @DKP_DOP @ganesh_madan @veeramani_art @dineshmoffl @itshravanthi @johnmediamanagr pic.twitter.com/rUcJssbHkG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments