விஜய் தேவரகொண்டா படத்தின் தமிழ் ரீமேக்கில் பிக்பாஸ் நடிகர்

  • IndiaGlitz, [Thursday,November 28 2019]

பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா நடிப்பில் அருண் பாஸ்கர் இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் தெலுங்கு படம் ‘பெல்லி சுப்புலு’. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிர முயற்சிகள் செய்யப்பட்டன. கவுதம்மேனன் தயாரிப்பில் அவருடைய உதவி இயக்குனர் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தமன்னா நடிப்பில் இந்த படம் தமிழில் தயாராவதாக கூறப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படம் டிராப் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா கேரக்டரில் பிக்பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை அவருடைய நண்பர் கார்த்திக் என்பவர் இயக்க விருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. விஷால் சந்திரசேகர் இசையில் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகி இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் ஹரிஷ் கல்யாணுடன் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.

ஹரிஷ் கல்யாண் ஏற்கனவே நடித்து முடித்துள்ள ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படம் வரும் டிசம்பர் 6ஆம் தேதி வெளிவர உள்ள நிலையில் அவர் ’தாராள பிரபு’, ’கசட தபற’ மற்றும் சசி இயக்கும் படம் உட்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

சமந்தாவின் அடுத்த படம் குறித்த புதிய தகவல்

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தென்னிந்திய திரையுலகில் பல வெற்றி படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை சமந்தா, இந்த ஆண்டு மட்டும் விஜய்சேதுபதியின்

'சும்மா கிழி' செய்த புதிய சாதனை: அனிருத் அறிவிப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'தர்பார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன.

'தளபதி 64' படம் குறித்த முக்கிய தகவலை தெரிவித்த இயக்குனர்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் 'தளபதி 64' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் முடிவடைந்த நிலையில்

'தலைவர் 168' படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'தலைவர் 168' படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில்

இளையராஜாவுக்காக சமரசம் பேச சென்ற பாரதிராஜா: தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு

இசைஞானி இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகத்திற்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை குறித்து சமரசம் ஏற்படுத்த பாரதிராஜா சென்ற நிலையில் பிரசாத் ஸ்டூடியோவுக்கு எதிரில்