10 வருடங்களுக்கு பின் தமிழுக்கு திரும்பும் நடிகை: சசிகுமார் ஜோடியாகிறார்!

  • IndiaGlitz, [Tuesday,August 17 2021]

பத்து ஆண்டுகளுக்குப் பின் தமிழ் திரையுலகிற்கு திரும்பும் நடிகை ஒருவருக்கு சசிகுமார் நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

சசிகுமார் நடிப்பில் இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் உருவாகவு புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இயக்குனர் சத்யசிவா ஏற்கனவே ’கழுகு’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஹரிப்பிரியா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கரண் நடித்த ’காக்க காக்க’ அர்ஜுன் நடித்த ’வல்லக்கோட்டை’ சேரன் நடித்த ’முரண்’ உள்பட சில படங்களில் நடித்துள்ளார் என்பதும்ம் பத்து ஆண்டுகளுக்கு பின் தற்போது மீண்டும் தமிழுக்கு திரும்பி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

சசிகுமார், ஹரிப்பிரியா முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் விக்ராந்த், துளசி, மதுசூதனன் உள்பட பலர் நடிக்கின்றனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில் ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்பதும், இந்த படத்தை டிவிடி ராஜா என்பவர் தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

ஆண்ட்ரியாவுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் 'சார்பாட்டா பரம்பரை' வீரர்!

சமீபத்தில் வெளியான பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து இந்த படத்திற்கு பின்னர்தான் பொதுமக்களுக்கு குத்துச்சண்டை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது

உதயநிதி ஸ்டாலினுக்கு புதிய பட்டம் கொடுத்த பிரபல இயக்குனர்!

நடிகரும் தயாரிப்பாளரும் எம்எல்ஏவுமான உதயநிதிக்கு புதிய பட்டம் ஒன்றை பிரபல இயக்குனர் அறிவித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

பறக்கும் விமானத்தில் இருந்து கீழே விழுந்தார்களா? அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து திரும்பிய நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் கை ஓங்கியது என்பதும் சமீபத்தில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் உள்பட

லார்ட்ஸ் மைதானத்தில் 38 வருட சாதனையை முறியடித்த சிராஜ்… கொண்டாடும் ரசிகர்கள்!

வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றுள்ளது

ஆந்திர முதல்வருக்கு கோவில்… குறைகளை தெரிவிக்க பெட்டி வைத்து அசத்தல்!

ஆந்திர அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்