'தெறி' விஜய்க்காக மெலடி பாடலை பாடிய பிரபல பாடகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'தெறி' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களை உலுக்கிய நிலையில் விரைவில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரவுள்ளது. அனேகமாக மார்ச் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் பாடல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் 'தெறி' படத்தில் பிரபல பாடகர் ஹரிஹரன் ஒரு மெலடி பாடலை பாடியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய்க்கு ஹரிஹரன் பாடிய பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. அவற்றில் நெஞ்சினிலே` படத்தில் இடம்பெற்ற மனசே மனசே`, குஷி` படத்தில் இடம்பெற்ற மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்`, உதயா` படத்தில் இடம்பெற்ற உதயா உதயா`, துப்பாக்கி` படத்தில் இடம்பெற்ற குட்டிப்புலி கூட்டம்` ஆகிய பாடல்கள் விஜய் ரசிகர்களின் மனதை கவர்ந்த பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வகையில் 'தெறி' படத்திலும் விஜய்க்காக ஹரிஹரன் பாடிய மெலடி பாடலும் விஜய் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், சமந்தா, எமிஜாக்சன், ராஜேந்திரன், மகேந்திரன், ராதிகா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com