திரையுலகில் அறிமுகமாகும் இயக்குனர் ஹரி வாரிசு.. ஒரே நேரத்தில் இரு அவதாரங்கள்..!

  • IndiaGlitz, [Tuesday,April 02 2024]

பிரபல இயக்குனர் ஹரியின் மகன் நடிகர் மற்றும் இயக்குனர் என ஒரே நேரத்தில் இரு அவதாரங்களில் திரையுலகில் அறிமுகம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஹரி தற்போது ’ரத்னம்’ என்ற படத்தை இயக்கியுள்ள நிலையில் விஷால் நடித்த இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது

இந்த நிலையில் ஹரி - ப்ரீத்தா தம்பதிக்கு மூன்று மகன்கள் இருக்கும் நிலையில் இவர்களில் மூத்த மகன் ஸ்ரீராம் என்பவர் தற்போது இயக்குனர் மற்றும் நடிகர் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஸ்ரீராம் தனது நண்பர்களுடன் சேர்ந்து ’ஹூம்’ என்ற படத்தை இயக்கி முடித்து உள்ளதாகவும் இந்த படம் தற்போது யூடியூபில் ரிலீஸ் ஆகி இருப்பதாகவும் தெரிகிறது. ஸ்ரீராமின் இந்த படத்தில் அவருடைய சித்தி ஸ்ரீதேவி விஜயகுமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும் இந்த படத்திற்கு சஞ்சய் ராஜ் ஒளிப்பதிவும் சாம் கார்மெலஸ் இசையமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது

ஸ்ரீராம் இயக்கத்தில் உருவான ’ஹூம்’ திரைப்படம் ஒரு த்ரில்லர் ஜானரில் உருவாகி இருப்பதாகவும் இந்த படம் யூடியூபில் இல் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் அவர் ஒரு முழுநீள திரைப்படத்தை விரைவில் அவர் இயக்கி நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.