'அரண்மனை 4' படத்தை அடுத்து 'சிங்கம் 4' உருவாகிறதா? ஹரி கொடுத்த சூப்பர் அப்டேட்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்படம் ஒன்று நான்காம் பாகமாக உருவாகி இருக்கிறது என்றால் அது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’அரண்மனை 4’ படம் தான் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூர்யா நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவான ’சிங்கம்’ திரைப்படம் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் ஆகியவை கடந்த 2013 மற்றும் 2017 ஆகிய வருடங்களில் வெளியானது என்றும் மூன்றுமே சூப்பர் ஹிட் ஆகியது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் ஒரு படம் உருவாக இருந்த நிலையில் திடீரென அந்த படம் டிராப் ஆனதாக கூறப்பட்டது. இதனால் மீண்டும் இருவரும் இணைய வாய்ப்பில்லை என்றும், ’சிங்கம் 4’உருவாகுவது கஷ்டம் தான் என்றும் கூறப்பட்டது. ஆனால் சமீபத்தில் ஹரியின் நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்து கொண்டதை அடுத்து இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ’ரத்னம்’ என்ற படத்தை ஹரி இயக்கி முடித்துள்ள நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ’நான் எங்கே சென்றாலும் ’சிங்கம் நான்காவது பாகம் குறித்து கேட்கிறார்கள், அந்த படம் ஹாட்ரிக் ஹிட் அடித்த படம் என்பதால் அடுத்த பாகத்திற்கு நிறைய உழைப்பு எனக்கு தேவைப்படுகிறது, ’சிங்கம் 4’ உருவாவது குறித்து காலம்தான் பதில் சொல்லும்’ என்று தெரிவித்துள்ளார். மேலும் தனக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை என்றும் அவர் உறுதிபட கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout