சினிமாவில் அறிமுகமாகும் 'கோல்ட்மேன்': ஜோடியாகும் பிக்பாஸ் வனிதா!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடமாடும் ’கோல்ட்மேன்’ என்று கூறப்படும் ஹரி நாடார் அவர்கள் நடிகராக அறிமுகமாக இருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வனிதா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது
ஹரி நாடார் என்பவர் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் '2K அழகானது காதல்’. இந்த படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி உள்பட பலர் கலந்து கொண்டனர்
இந்த படத்தை முத்தமிழ் வர்மா என்பவர் இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் நாயகியாக வனிதா நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது
இந்த படத்தில் நடிப்பது குறித்து ஹரிநாடார் கூறியபோது, ‘இந்த படத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் முத்தமிழ் வர்மா அவர்கள் கதையைக் கூறினார். இந்த படத்தின் கதைப்படி நீங்கள் நடித்தால்தான் இந்த கதை இன்றைய தலைமுறைக்கு சென்று சேரும் என்றும் அவர் என்னிடம் கூறினார். எனவே நான் இந்த கதையை கேட்டு எனக்கு கதை பிடித்துப் போனதால் நான் நடிப்பதற்கு சம்மதத்தோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை தயாரிப்பதற்கும் நான் முன் வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
Pooja today...filming starts... pic.twitter.com/c0Ev0AjRYv
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) February 27, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com