தேர்தலுக்காகக் கமல் பாணியைப் பின்பற்றும் ஹரி நாடார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
பனங்காட்டுப் படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் என்பதை விட தங்கநகைக் கடை ஹரி நாடார் என்பதே தமிழகத்தில் பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்து வருகிறது. அந்த அளவிற்கு தனது தனித்த அடையாளத்தால் தமிழக மக்கள் மத்தியில் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகிறார் சட்டமன்ற வேட்பாளர் ஹரி நாடார்.
தற்போது வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தனி விமானத்திலும் ஹெலிகாப்டரிலும் பயணம் செய்து வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். காரணம் முதல் முறையாக முதல்வர் வேட்பாளரை அறிவித்து களம் இறங்கி இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நடிகர் கமல்ஹாசனை விட்டால் வேறு பெரிய தலைவர்கள் யாரும் இல்லை எனும் நிலைமை இருந்து வருகிறது. எனவே தனது ஒத்த அடையாளத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில் தான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் தனி விமானம் அல்லது ஹெலிகாப்டரில் பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு உள்ளார். இவரது செய்கைக்கு பலத்த விமர்சனங்கள் எழுந்த போதிலும் அதைப் பற்றியெல்லாம் கண்டுகொள்ளாத நடிகர் கமல் தொடர்ந்து தனது தேர்தல் வேலைகளைக் கவனித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கமலின் பாணியை பாஜக வேட்பாளராக களம் இறங்கி இருக்கும் நடிகை கவுதமியும் பின்பற்றுகிறார் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்து வந்தன.
தற்போது இந்தப் பாணியை தங்கநகைக் கடை ஹரி நாடாரும் பின்பற்றி வருகிறார். மேலும் இவர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வரும்போது இவர் கொடுக்கும் பில்டப்பை பார்த்தே சிலர் கடும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். காரணம் பனங்காட்டு படை கட்சி வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக 44 சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி இருக்கிறது. எனவே இந்த 44 தொகுதிகளுக்கும் தற்போது பறந்து பறந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் ஹரி நாடார்.
இப்படி தொடர்ந்து ஹரி நாடார் அவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தாலும் தனது கழுத்தில் 11 கிலோ எடைக் கொண்ட தங்க நகைக்கு மட்டும் அவர் ஒருபோதும் ஓய்வு கொடுக்காமல் இருந்து வருகிறார். மேலும் இவர் செல்லும் இடங்களுக்கு எல்லாம் பெண்கள் ஈக்களாய் மொய்க்கவும் செய்கின்றனர். ஒருவேளை இவர் கழுத்தில் தொங்கும் தங்க நகையைப் பார்ப்பதற்கே கூட்டம் கூடுகிறதோ? என்னவோ? இந்நிலையில் 44 தொகுதிகளில் களம் இறங்கி இருக்கும் ஹரி நாடாரின் தேர்தல் வாய்ப்பை நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout