ஹரி - விஷால் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.. படப்பிடிப்பு எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,May 24 2023]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் மேலும் சில தகவல்கள் தற்போது கசிந்து உள்ளன

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் முதல் வாரம் தொடங்க இருப்பதாகவும் இந்த படப்பிடிப்புக்கு தேவையான ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு இணைந்து உள்ளதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் இரு மாநிலங்களில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் தெரிகிறது.

மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தினத்தன்று கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த வீடியோவை தயாரிக்கும் பணிகளில் தற்போது படக்குழுவினர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2007 ஆம் ஆண்டு ’தாமிரபரணி’ படத்தில், 2014 ஆம் ஆண்டு ’பூஜை’ படத்தில் இணைந்த ஹரி - விஷால் கூட்டணி மீண்டும் 9 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.