ஹரியின் அடுத்த படத்தில் இவர்தான் நாயகி.. 'விஷால் 34' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்..!

  • IndiaGlitz, [Thursday,June 15 2023]

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவருடைய அடுத்த படத்தில் விஷால் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் செய்திகள் வெளியானது.

ஏற்கனவே விஷால் நடிப்பில் உருவான ’தாமிரபரணி’ ,’பூஜை’ ஆகிய படங்களை ஹரி இயக்கிய நிலையில் இருவரும் இணையும் மூன்றாவது படம் இது என்பதால் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது இந்த படத்தின் நாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஹரி இயக்கத்தில் உருவான ’யானை’ திரைப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்த நிலையில் மீண்டும் ஹரி இயக்கத்தில் அவர் நடிக்க உள்ளார் என்பதும், ஆனால் அதே நேரத்தில் விஷால் உடன் அவர் முதன்முறையாக இணைய உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் அது குறித்த தகவல்கள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.