ஃபார்முக்கு வந்த ஹரி.. அம்மா செண்டிமெண்ட்.. அதிரடி ஆக்சன்.. 'ரத்னம்' படத்தின் முதல் விமர்சனம்..
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரத்னம்’ திரைப்படம் நாளை பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் பல திரையரங்குகளில் ஹவுஸ்புல் ஆகி விட்டதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் பிரபலங்களுக்காக ‘ரத்னம்’ படத்தின் ஸ்பெஷல் காட்சி திரையிடப்பட்ட நிலையில் அந்த படத்தை பார்த்த தமிழ் திரைப்பட இயக்குனர் யோகேந்திரன் என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் ‘ரத்னம்’ படத்தின் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஹரி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளதாகவும் யோகி பாபுவின் ஒவ்வொரு காமெடியும் அம்சமாக இருப்பதாகவும் அம்மா சென்டிமென்ட் முதல் அதிரடி ஆக்சன் காட்சி வரை நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளதாகவும் ஒரு நல்ல பொழுதுபோக்கு மசாலா திரைப்படமாக உருவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த கோடை விடுமுறையில் குடும்பத்துடன் பார்க்க சரியான படம் என்றும் விஷாலுக்கு இன்னொரு வெற்றி படம் உறுதி என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் விமர்சனமே பாசிட்டிவாக வந்துள்ளதை அடுத்து இந்த படம் நாளை சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Rathnam Director Hari is back to form. Everything from @iYogiBabu comedy , Amma sentiment to high octane action sequences worked well to make it an engaging Masala entertainer. Good to watch with family. Another hit for @VishalKOfficial
— Yoagandran Raako (@yoagandran) April 24, 2024
#Rathnam in theatres from tomorrow, book your tickets now 🔥
— IndiaGlitz - Tamil (@igtamil) April 25, 2024
Starring Puratchi Thalapathy @actorvishalofficial.
A @ThisisDSP musical.
A film by #Hari, in theatres from tomorrow.
@priyabhavanishankar @stonebenchers @invenio_origin @ZeeStudiosSouth @mynaasukumarm #TSJay… pic.twitter.com/H36ApmSUbB
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com