குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியா? ஹர்திக் பட்டேல் அதிரடியால் பரபரப்பு

  • IndiaGlitz, [Saturday,December 30 2017]

சமீபத்தில் நடந்து முடிந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் 99 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி 80 தொகுதிகளிலும் மற்றவர்கள் 3 தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் மீண்டும் குஜராத் முதல்வராக சமீபத்தில் விஜய் ருபானி பதவியேற்றுக் கொண்டார். ஆனால் துணைமுதல்வர் நிதின்பட்டேல் அலுவகம் வந்து இன்னும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த முறை போல  நிதி, நகர்ப்புறம், பெட்ரோலியம் ஆகிய துறைகளை அவர் கேட்டதாகவும், ஆனால் நிதின்பட்டேல் கேட்ட துறைகளை பாஜக மேலிடம் ஒதுக்கவில்லை என்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை தேர்தல் முடிவுகள் குறித்து ஆய்வு செய்த ஹர்திக் பட்டேல் பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மூத்த தலைவர்களுக்கு பாஜக எப்போதுமே மரியாதை கொடுத்ததில்லை. நிதின் பட்டேல் 10 பாஜக எம்.எல்.ஏ.,க்களுடன் வருவதற்கு தயாராக இருந்தால்,  நான் காங்கிரசுடன் பேசி அவர்களை வரவேற்று நல்ல பதவி கொடுக்குமாறு கூறுகிறேன் என்று கூறியுள்ளார்.

ஹர்திக் கூறியவாறு நிதின்பட்டேல் 10 எம்.எல்.ஏக்களுடன் வந்தால் ஏற்கனவே 80 தொகுதிகள் வைத்துள்ள காங்கிரசுக்கு ஆட்சி அமைக்கும் அளவிற்கு ஆதரவு கிடைத்துவிடும் என்பதால் குஜராத்தில் திடீர் திருப்பம் ஏற்படுமா? என்று அரசியல் விமர்சகர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.

More News

பத்மாவதி' படத்திற்கு 'யூ/ஏ சான்றிதழ் அளித்து நிபந்தனையும் விதித்த சென்சார் போர்டு

பத்மாவதி' என்ற டைட்டிலை 'பத்மாவத்' என்று மாற்றம் செய்ய வேண்டும் என்றும், 26 இடங்களில் கட் செய்ய வேண்டும் என்றும் தணிக்கை குழுவினர் விதித்த நிபந்தனைகளை

தமிழ்நாட்டை காப்பாற்ற ரஜினியும் தேவை: அன்புமணி

'அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம், ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால் ரஜினி சீக்கிரம் வந்தால் நல்லது. அவர் அரசியலுக்கு வரவுள்ளதாக நீங்கள் தான் சொல்லி வருகிறீர்கள். முதலில் அவர் சொல்லட்டும்

அஜித் இயக்குனரின் அடுத்த படத்தில் விக்ரம்?

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை அஜித்தின் 'பில்லா', 'ஆரம்பம்' ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது

கவுதம் மேனன் படத்தில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் தனுஷ் நடித்து வரும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' ஆகிய படங்களை இயக்கி வருகிறார்.

ராகவா லாரன்ஸ் வெளியிட்ட 'வா தலைவா போருக்கு' பாடல் வரிகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அரசியலுக்கு அழைக்கும் பாடல் ஒன்றை ராகவா லாரன்ஸ் இன்று காலை வெளியிடவுள்ளார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இதோ அந்த பாடலின் வரிகள்