உடனே உறவினர்களுக்கு போன் செய்யுங்கள்: மோடியை கலங்க வைத்த ஹர்திக் பட்டேல் பேச்சு

  • IndiaGlitz, [Monday,December 04 2017]

குஜராத் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் 9 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாஜகவுக்கு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக சூறாவளி பிரச்சாரம் செய்து வருகிறார்

இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் பெரும் செல்வாக்குடன் உள்ள பட்டிதார் சமுதாய தலைவர் ஹர்திக் பட்டேல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 

இந்த நிலையில் பாஜகவின் கோட்டை என்று கூறப்படும் சூரத் நகரில் நேற்று ஹர்திக் பட்டேல் கூட்டம் ஒன்றில் பேசினார். இந்த கூட்டத்திற்கு பெருங்கூட்டம் கூடியது. குறிப்பாக இளைஞர்கள் பெருந்திரளாக கூடியிருந்தனர்.

இந்த கூட்டத்தில் ஆவேசமாக பேசிய ஹர்திக் பட்டேல் சிறிது நேரம் பேச்சை நிறுத்தி, கூட்டத்தில் இருந்தவர்களை நோக்கி “நான் உங்களுக்கு 5 நிமிடங்கள் கொடுக்கிறேன். உங்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கு உடனே போன் செய்து பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறுங்கள்” என்று கூறினார். அவருடைய மந்திர வார்த்தைக்கு கட்டுப்பட்ட கூட்டத்தினர் உடனே போன் செய்ய தொடங்கினர். 

ஹர்திக் பட்டேலின் இந்த ஆவேச உத்தி, பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்களை கலங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது.