அவரு என் அண்ணன்… மெண்டர் தோனியின் வருகையைக் கொண்டாடும் இளம் வீரர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பையில் கலந்துகொள்ளும் இந்தியக் கிரிக்கெட் அணிக்கு மெண்ட்ராக மகேந்திர சிங் தோனி நியமிக்கப்பட்டு இருக்கிறார். இவர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டில் இணைந்திருப்பது குறித்து ரசிகர்கள் ஆரவாரம் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களைப் போல இந்தியக் கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியாவும் பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.
மும்பை அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவரும் ஹர்திக் பாண்டியா இந்தியக் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மற்றும் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருகிறார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு எம்.எஸ்.தோனி தலைமையில் இந்தியக் கிரிக்கெட் அணிக்குள் நுழைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு ஹர்திக் பாண்டியாவிற்கு மிகவும் நெருக்கமானவரும் கூட.
தற்போது தோனியின் வருகையை ஹர்திக் பாண்டியா கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். அதுகுறித்து கருத்துப் பகிர்ந்து கொண்ட ஹர்திக் பாண்டியா, “ஆரம்பத்தில் இருந்தே என்னை நன்றாக புரிந்துகொண்டவர் மாஹி பாய். அவரை நான் எப்போதும் பேட்ஸ்மேனாக பார்த்தது இல்லை. பல வழிகளில் அவர்தான் எனக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுத்து இருக்கிறார். எனக்கு ஒரு சிக்கல் என்றால் முதல் ஆளாக வந்துநிற்பதும் அவர்தான். அவருடன் பழகினால் தானாகவே மெர்ச்சூரிட்டி வந்துவிடும். அந்த அளவிற்கு தன்னிலையை இழக்காதவர்.
அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். கடந்த 2019 ஆம் ஆண்டு நியூசிலாந்து கிரிக்கெட் சீரிஸ்க்கு நான் விளையாடச் சென்றபோது எனக்கு ஹோட்டல் அறை ஒதுக்கப்படவில்லை. அப்போது திடீரென்று ஒரு போன் கால். என்னுடைய அறைக்கு வா… நான் மெத்தையில் தூங்க மாட்டேன். நான் தரையில் படுத்துக்கொள்கிறேன். நீ மெத்தையில் தூங்கு” என்று பாசத்தோடு என்னை அழைத்தார்“ என்று தெரிவித்துள்ளார்.
மெண்டராக பொறுப்பேற்றுள்ள மகேந்திர சிங் தோனியின் வரவை பார்த்து ஹர்திக் பாண்டியா பகிர்ந்து கொண்ட இந்த நெகிழ்ச்சியான கருத்துக்கள் தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகின்றன. மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கும் மாஹி பாய்க்கும் உள்ள இந்த உறவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout