செல்ல மகனுடன் மழலை மொழியில் கொஞ்சும் ஹர்திக் பாண்டியா… வைரல் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த பினிஷராக அறியப்படுபவர் ஹர்திக் பாண்டியா. தோள்பட்டை காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பந்துவீச்சில் ஈடுபடாமல் இருந்த இவர் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பந்துவீச்சிலும் ஈடுபட்டார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஹிர்திக் பாண்டியா தனது மகள் அகஸ்தியாவுடன் கொஞ்சி விளையாடியுள்ளார். இதுகுறித்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில் நீ எப்படி அழுவார் என ஹர்திக் கேட்க, மழலை மொழியில் அகஸ்தியா பதில் சொல்கிறார். மேலும் ஹர்திக் சில விலங்குகளின் பெயரைக் கூறுகிறார். அதற்கும் அகஸ்தியா பதில் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மிடியாவில் வைரலாகி வருகிறது.

செர்பியா நடிகையான நடாஷா என்பவரை காதலித்து ஹர்திக் பாண்டியா கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அகஸ்தியா எனும் ஆண் குழந்தை பிறந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

More News

மீண்டும் இணையும் 'பருத்திவீரன்' வெற்றிக் கூட்டணி!

தமிழ் திரையுலகில் மெகா ஹிட்டான படங்களில் ஒன்றான 'பருத்திவீரன்' கூட்டணி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டிசம்பரில் வெளியாகும் இரண்டு அதர்வா படங்கள்: என்னென்ன படங்கள்?

தமிழ் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான அதர்வாவின் இரண்டு திரைப்படங்கள் வரும் டிசம்பரில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாமரையுடன் காரசாரமாக மோதும் பிரியங்கா: அடுத்த எலிமினேஷனா?

கடந்த சில வாரங்களாகவே தாமரையுடன் மோதியவர்கள் எல்லிமினேஷன் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் பிரியங்கா தாமரையுடன் காரசாரமாக மோதுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

விஜய்சேதுபதியுடன் இணைந்த கெளதம் மேனன்: அதிகாரபூர்வ அறிவிப்பு

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கௌதம் மேனன் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

6 மாதங்களுக்கு பின் முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல பாடகி!

தமிழ் மட்டுமின்றி இந்தியாவின் பல மொழிகளில் மிகச் சிறந்த பாடகியாக இருந்து வருபவர் ஷ்ரேயா கோஷல் என்பது தெரிந்ததே. இவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஷைலாதித்யா முகோபாத்யா என்பவரை திருமணம்