நீச்சல் குளத்தில் ஹர்திக் பாண்டியாவை முத்தமிட்டு விளையாடும் முக்கிய நபர்… யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இடம்பெற்ற ஹர்திக் பாண்டியா அதற்குப் பிறகு நடைபெற்ற நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் விளையாடாமல் இருந்துவருகிறார். இந்நிலையில் ஓய்வில் இருக்கும் அவருடன் நீச்சல் குளத்தில் இருந்தபடியே ஒரு நபர் முத்தமிட்டு விளையாடுகிறார். இதுகுறித்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதையடுத்து பந்துவீச்சில் ஈடுபடாமல் இருந்துவந்தார். தொடர்ந்து டி20 உலகக்கோப்பை போட்டியில் 5 ஆவது பந்து வீச்சாளர் தேவைப்பட்டபோது தோனியின் அட்வைஸை கேட்டு அவர் பந்து வீச்சில் ஈடுபட்டார். ஆனால் அதுவும் எடுபடாமல் போனது.
இதையடுத்து தீவிரப் பயிற்சியில் இருந்துவரும் ஹர்திக் எந்தப் போட்டிகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்துவருகிறார். தற்போது ஐபிஎல் போட்டிகளையொட்டி அவர் அகமதாபாத் அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வீட்டில் இருக்கும் ஹர்திக் பாண்டியா தனது மகன் அகஸ்தியாவுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நீச்சல் குளத்தில் இருந்தபடியே அகஸ்தியாவை கொஞ்சி விளையாடி இருக்கிறார். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்றிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com