ஹர்திக் பாண்டியா WWE இல் சேர்ந்துவிட்டாரா? இணையத்தில் வைரலாகும் சுவாரசியத் தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியக் கிரிக்கெட் அணியில் சிறந்த மிடில் ஆர்டர் வீரராகவும் பினிஷராகவும் இருந்துவரும் ஹர்திக் பாண்டியா கிரிக்கெட்டை விட்டுவிட்டு மல்யுத்தப் போட்டியில் சேர்ந்துவிட்டாரா எனும் சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹர்திக் கிரிக்கெட் பயிற்சியைப் போலவே வொர்க் அவுட் விஷயத்திலும் தீவிர ஆர்வம் கொண்டவர் என்பதும் அவர் எப்போதும் சிக்ஸ் பேக்குடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பதும் ரசிகர்களுக்குத் தெரிந்ததுதான். இந்நிலையில் ஹர்திக் மல்யுத்தப் போட்டியில் விளையாடுவது போன்ற ஒரு புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் ஏன் கிரிக்கெட்டை விட்டுவிட்டு மல்யுத்தமா? எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உண்மையில் ஹர்திக் பாண்டியாவை போலவே உருவத்தில் ஒத்திருக்கும் மல்யுத்த வீரர் ஒருவர் அமெரிக்காவில் இருந்துவருகிறார். கார்மெலோ ஹேல்ஸ் எனப் பெயர்க்கொண்ட அவருடைய புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவுடன் ஒப்பிட்டு இருவரின் புகைப்படங்களையும் தற்போது வைரலாக்கி வருகின்றனர். பார்ப்பதற்கு ஹர்திக் போலவே இருக்கும் கர்மெலோ தற்போது இதுகுறித்து “ஹர்திக் பாண்டியா என்னை இந்தியாவில் ட்ரெண்ட் செய்துள்ளார். அன்புக்கு நன்றி என டிவிட்டரில் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்தியக் கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராகவும் சிறந்த பவுரலாகவும் இருந்துவரும் ஹர்திக் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 2019 இல் அறுவை சிகிச்சை செய்துகொண்டார். இதையடுத்து அவர் கடந்த 2 ஆண்டுகளாகப் பந்துவீச்சில் ஈடுபடாமல் இருந்துவருகிறார். மேலும் நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பை போட்டியின்போது ஒரு போட்டியில் பந்து வீசினார். ஆனாலும் அது எடுபடாமல் போனது.
இதையடுத்து நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டிஸ் போன்ற அணிகளுக்கு எதிரான இந்திய அணியில் அவர் இடம்பெறாமல் இருந்து வருகிறார். இதையடுத்து ஐபிஎல் போட்டிகளில் கவனம் செலுத்திவரும் ஹர்திக் பாண்டியா ஐபிஎல்-இல் முக்கிய வீரராகவும் உருவெடுத்துள்ளார். ஏலத்திற்கு முன்பே இவரை அணியில் தக்க வைத்துக்கொண்ட அகமதாபாத் அணி இவரை அந்த அணியின் கேப்டனாக நியமித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
.@hardikpandya7 has me trending in India. Much love ????
— Carmelo Hayes (@Carmelo_WWE) February 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments