ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்! ஏன் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இந்திய கிரிக்கெட் வீர்ர்கள் ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்ட்யா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்தனர். இந்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்த் நிலையில் இதுகுறித்து பிசிசிஐ இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. இதனையடுத்து இருவரும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டனர். இருப்பினும் இருவரையும் பிசிசிஐ சில போட்டிகளில் விளையாட தடை செய்தது. மேலும் இதுகுறித்து விசாரணை செய்ய முன்னாள் நீதிபதி ஒருவரை சுப்ரீம் கோர்ட் நியமனம் செய்தது.
இந்த நிலையில் இந்த விசாரணை தற்போது முடிவுக்கு வந்து இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராத தொகையில் ரூ.10 லட்சம் பணியின்போது மரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர்களுக்கும் மீதி ரூ.10 லட்சம் பார்வையற்றோர் கிரிக்கெட் நல நிதிக்கும் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இருவரும் அபராத தொகையை கட்டவில்லை என்றால் அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout