ஓடஓட விட்ட ஹர்திக் பாண்ட்யா.. 'நீ இந்தியா டீமுக்கு வா பார்த்துக்கிறேன்'.. ரோஹித் சர்மாவின் மைண்ட் வாய்ஸ்
- IndiaGlitz, [Monday,March 25 2024] Sports News
நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதிய நிலையில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அந்த அணியின் சீனியர் வீரரான ரோஹித் சர்மாவை ஓடவிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து ரோகித் சர்மாவின் மைண்ட் வாய்ஸ் ஆக ’நீ இந்தியா டீமுக்கு வந்து தான் ஆகணும், அப்ப பார்த்துக்கிறேன்’ என்று கூறியது போன்ற மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில் மும்பை அணி கடைசி நேரத்தில் எதிர்பாராத விதமாக தோல்வி அடைந்தது. 169 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணி கடைசி ஓவரையில் 19 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் முதல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடித்து விட்டதால் வெற்றி பெற்று விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த பந்துகளில் இரண்டு விக்கெட் இழந்த நிலையில் அதற்கு அடுத்த இரண்டு பந்துகளில் சிங்கிள் மட்டுமே எடுத்ததால் குஜராத் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
இந்த நிலையில் இந்த போட்டியில் மும்பை அணி பந்துவீசிய போது 20 ஓவரின் போது ரோகித் சர்மாவை இங்கும் அங்கும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அலைக்கழித்த வீடியோ தான் தற்போது மும்பை ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பொதுவாக சீனியர் வீரர்கள் என்றால் ஸ்லிப் போன்ற இடத்தில் தான் நிற்க வைப்பார்கள். தோனி கூட சச்சினை ஸ்லிப்பில் மட்டுமே நிற்க வைப்பார். ஆனால் ரோகித் சர்மாவை மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, லாங் ஆனில் நிற்க வைத்தது மட்டும் இன்றி அங்கே போங்கள், இங்கே போங்கள் என மாறி மாறி ஹர்திக் பாண்டியா சொன்னது ரோஹித் சர்மாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது
இதனையடுத்து அவர்கள் மீம்ஸ்களாக ’ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்தியா டீமுக்கு தானே வரவேண்டும், அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பார்த்துக் கொள்வார் என்று பதிவு செய்து வருகின்றனர். ஒரு சீனியர் வீரரை ஹர்திக் பாண்டியா மதிக்காமல் நடந்து கொண்டதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
CSK kanni எனக்கே கஷ்டமா இருக்குடா 🥲 pic.twitter.com/HkkBppWKye
— Navin Chakravarthy - Say No To Drugs & DMK (@navin_offl) March 24, 2024