ஆட்டத்தைத் துவங்கிவிட்ட மெண்டர் தோனி… பிளேயிங் 11-இல் மாற்றமா?

பிளேயிங் 11-இல் இருந்து ஹர்திக் பாண்டியாவை தூக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஷல்துல் தாக்கூரை சேர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்துவந்தது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக பந்து வீச்சில் ஈடுபடாமல் இருந்த பாண்டியா தற்போது திடீரென்று பந்துவீச்சில் ஈடுபட்டு வருகிறார். மேலும் பிளேயிங்-11னிலும் தொடர்கிறார். இதற்கு மெண்டர் தோனியே காரணம் என கிரிக்கெட் வட்டாரம் பரபரப்பு தகவலை கூறியிருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக இருந்துவரும் ஹர்திக் பாண்டியா தோள்பட்டை காயம் காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு அறுவைசிகிச்சை செய்துகொண்டார். அதற்குப்பின்பு பந்துவீச்சில் ஈடுபடாமலே இருந்துவந்தார். தற்போது நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியக் கிரிகெட் அணிக்கு 6 ஆவது பவுலர் வேண்டும் என்ற கோரிக்கை முற்றியிருக்கிறது.

காரணம் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய பவுலர்கள் ஒரு விக்கெட்டைக் கூட எடுக்க முடியாமல் திணறினர். இன்னொருபக்கம் ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் பாகிஸ்தான் 151 ரன்களை அடித்து அபார வெற்றிப்பெற்றது. இதனால் இந்திய பவுலிங் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.

இதையடுத்து பிளேயிங் 11 –இல் 6 ஆவது பவுலர் வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்நிலையில் தோனி, ஹர்திக் பாண்டியாவிடம் பவுலிங் செய்யச் சொன்னதால் அவர் அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஹர்திக் பாண்டியா உடனடியாக வலைப்பயிற்சியில் ஈடுபட்டு தொடர்ந்து 15 நிமிடங்கள் அசராமல் பந்துவீச்சில் ஈடுபட்டு உள்ளார். இதையடுத்து ஹர்திக் பாண்டியா அணியில் தொடர்ந்து பந்துவீசுவார் என்றும் அவர் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.

இதற்கு முன்பு ஹர்திக் பாண்டியாவை நீக்கிவிடலாம் என அணி நிர்வாகம் கூறியபோது “அவர் நல்ல பினிஷர், அணிக்கு அவர் தேவை“ என்று தோனியே சர்டிபிக்கேட் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More News

பெயர் மாற்றப்பட்ட “பேஸ்புக்“… CEO அறிவிப்பு!

சமூகவலைத்தள நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும்

ரஜினிகாந்த் உடல்நலம் குறித்து மருத்துவமனை அறிக்கை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ரத்த ஓட்டத்தை

கல்வி முறையே தவறாக இருக்கிறது? விரக்தியில் மாணவர் எடுத்து விபரீத முடிவு!

கர்நாடக மாநிலத்தில் பொறியியல் மாணவர் ஒருவர், கல்வி முறையே தவறாக இருக்கிறது, அதில் மாற்றத்தை கொண்டு வரவேண்டும்

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்!

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவர்கள் சற்று முன்னர் மாரடைப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வந்த நிலையில்

பிரபல நடிகருக்கு மாரடைப்பு: மருத்துவமனை சென்று விசாரித்த முதல்வர்!

பிரபல நடிகருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து முதலமைச்சர் நேரில் சென்று விசாரித்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது