பதவி வரும்போது பணிவும் வரவேண்டும் தோழா: ஹர்திக் பாண்ட்யாவின் ஆட்டிட்யூட்.. ருத்ராஜின் பணிவு..
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ரோகித் சர்மாவை அலைக்கழித்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவின் செயலுக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அதேபோல் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக பதவியேற்ற ருத்ராஜ், தோனியிடம் அவ்வப்போது ஆலோசனை கேட்டு நடந்து கொண்ட செயல்களின் வீடியோவும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
கேப்டன் பதவி இழந்தாலும் சீனியர்கள் தங்களது அனுபவத்தின் மூலம் புதிய கேப்டனுக்கு ஆலோசனை கூறுவார்கள் என்பதும் அதனை புதிதாக வந்த கேப்டன்களும் பரிசீலனை செய்து ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் கிரிக்கெட் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் கடைபிடிக்கப்படும் ஒரு அம்சமாகும்.
ஆனால் மும்பை அணியின் கேப்டனாக வந்த ஹர்திக் பாண்ட்யா முந்தைய கேப்டன் ரோஹித் சர்மாவை மதிக்காதது மட்டுமின்றி அவரை அலைக்கழித்த விதம் தான் மும்பை ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
ஆனால் சென்னை அணியின் கேப்டன் ருத்ராஜ் அவ்வப்போது முன்னாள் கேப்டன் தோனியிடம் ஆலோசனை பெற்றதோடு பில்டிங் செட் செய்து விட்டு அவரிடம் ஆலோசனை பெற்று வரும் காட்சிகளையும் பார்த்து வருகிறோம். எனவே ’பதவி வரும்போது பணிவு வரவேண்டும் துணிவு வரவேண்டும் தோழா’ என்ற பொன்மொழிக்கு ஏற்ப ருத்ராஜ் நடந்து கொண்ட நிலையில் அவருக்கு வெற்றி கிடைத்தது என்றும் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டிட்யூட் காரணமாகத்தான் அவருக்கு தோல்வி கிடைத்தது என்றும் நெட்டிசன் கூறி வருகின்றனர்.
மொத்தத்தில் சீனியர்களை மதித்து விளையாடும் கேப்டன் வெற்றி பெறுவார் என்றும், சீனியர்களை உதாசீனப்படுத்தும் கேப்டன் தோல்வி அடைவார் என்றும் இதன்மூலம் தெரிவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Difference between handing over captaincy and taking away captaincy !
— Badri Dhoni (@badridhoni_) March 24, 2024
My team chose the right one 💛
pic.twitter.com/C85NMDI6A9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com