என்னை டீமில் சேர்க்காதீங்க… பாண்டியாவின்  திடீர் கோரிக்கைக்கு என்ன காரணம்?

இந்தியக் கிரிக்கெட் அணியில் ஆல்ரவுண்டராக வலம்வரும் ஹர்திக் பாண்டியா தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியக் கிரிக்கெட் அணியில் இடம்பெறவில்லை. மேலும் தற்போது என்னை இந்திய அணியில் சேர்க்க வேண்டாம் என்று ஹர்திக் பாண்டியா பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்து இருக்கிறார். இந்தத் தகவல் தற்போது ரசிகர்களிடையே கடும் வியப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியக் கிரிக்கெட் அணியில் சிறந்த பினிஷராகக் கருதப்படும் ஹர்திக் பாண்டியாவிற்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் உண்டு. மேலும் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மட்டுமல்லாமல் அணிக்கு சிறந்த பங்களிப்பை செய்துவந்தார். இதனால் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் தவிர்க்க முடியாத நபராக வலம் வந்த அவர் கடந்த சில வருடங்களாக காயம் காரணமாக பந்துவீச்சில் ஈடுபடாமல் இருந்துவந்தார். இதனால் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஐபிஎல் போட்டியிலும் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் ஈடுபடவில்லை. இதனால் இந்திய அணியில் அவருடைய பங்குகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதையடுத்து டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது மெண்டர் தோனியின் ஆலோசனைப்படி அவர் பந்துவீசினார். ஆனாலும் தன்னை தக்கவைத்துக்கொள்ள ஹர்திக் திணறினார். இதையடுத்து பிசிசிஐ, நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்யாமல் விட்டுவிட்டது.

தற்போது தேசிய அகாடமியில் வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளுமாறு ஹர்திக் பாண்டியாவிற்கு பிசிசிஐ உத்தரவிட்டு உள்ளது. இதற்கு பதிலளித்த ஹர்திக் பாண்டியா தனக்கு ஏற்பட்ட காயம் இன்னும் முழுமையாக குணமாகவில்லை என்றும் தற்போது பந்துவீச்சில் முழு கவனம் செலுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஹர்திக் பாண்டியாவின் இந்தப் பதிலை கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வரவேற்றுள்ளனர். காரணம் ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பதைவிட சிறந்த ஆல்ரவுண்டராகவே இருக்க வேண்டும். இதனால் முழு உடல் தகுதியை எட்டும்வரை தன்னை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டது சரிதான் என்று கிரிக்கெட் விமர்சகர்களும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

More News

நீ சொல்வதை செய்ய முடியாது: கேப்டன் நிரூப் உத்தரவை எதிர்க்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் வீட்டில் இந்த வார கேப்டன் டாஸ்கில் இமான் அண்ணாச்சி வெற்றிபெற்ற நிலையில் திடீரென தன்னிடம் உள்ள காயினை பயன்படுத்தி நிரூப் கேப்டனாக மாறியுள்ளார். 

மாரி செல்வராஜ் படத்தில் முதல்முறையாக வடிவேலு: ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

'ஜெயில்' படத்துக்கு எத்தனை பிரச்சினை தான் வரும்: வசந்தபாலன் பதிவு

பிரபல இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான 'ஜெயில்' திரைப்படம் டிசம்பர் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்

நடிகை ரீமாசென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா? வைரல் புகைப்படம்! 

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கிய 'மின்னலே' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ரீமாசென் என்பதும் அதன் பின் அவர் விஜய் நடித்த 'பகவதி' செல்வராகவன் இயக்கிய 'ஆயிரத்தில்

தேசிய விருதை அடுத்து அசுரனுக்காக மேலும் ஒரு விருதை பெறும் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அந்த 'அசுரன்' திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பதும் அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகிய இருவருக்குமே