யாஷிகாவை வச்சு செய்யும் விஜி-ரித்விகா

  • IndiaGlitz, [Monday,September 17 2018]

இதுவரை மற்றவர்களை பழிவாங்குவது போன்ற டாஸ்க் ஐஸ்வர்யாவுக்கும், யாஷிகாவிற்கும் தான் வந்துள்ளது. இவர்கள் இருவரும் செய்யும் அராஜகங்களை மற்றவர்கள் வேடிக்கை பார்ப்பதோடு சரி. ஆனால் விஜயலட்சுமி வந்த பின்னர் ஐஸ்வர்யா, யாஷிகாவின் கொட்டம் ஓரளவு அடங்கியது போல் தெரிந்தது

இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் யாஷிகாவை வச்சு செய்ய முடிவு செய்துவிட்டார் விஜி. யாஷிகா அணிந்திருக்கும் சேலையை கத்தரி எடுத்து விஜி ஒருபக்கம் கட் செய்ய, இன்னொரு பக்கம் விஜியின் முகத்திற்கு நேராக ரித்விகா பெப்பர் போடுகிறார்.

மொத்தத்தில் இன்றைய டாஸ்க்கில் நிச்சயம் ஏதோ பெரிதாக மோதல் நடக்கவிருப்பது போன்ற நிலை புரமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. யாஷிகா, ஐஸ்வர்யாவை பிடிக்காதவர்களுக்கு இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.